Through this site I want to share and express my Ideas on Music, Art and religion, , Poems and Lyrics composed by me, and also to share my views in various aspect.-Kalavathy Rengasamy
Friday, August 26, 2011
Tuesday, August 9, 2011
samayapuram paamaalai -1
ஆனந்த பைரவி தாளம்:ஆதி
பல்லவி
சமயபுரம் தனில் வாழும் சக்தி நீயே -உன்னை
சரணடைந்த மாந்தர்க்கு அருள்வாய் முக்தி தாயே (சமய
அனு பல்லவி
சித்தமெலாம் செம்மை செயும் செந்நிற தாளே
(நித்தமுந்தன் தாள் பணிய அருள்புரிவாயே (சமய
சரணம்
திருவானை தீர்த்தத்தில் நீராடும் நங்கை
திருமாலின் சீர்மேவும் செல்வ தங்கை
ஒரு நாளும் தீகிலாது காத்திடும் மங்கை
தரு வேம்பு தழையினிலே பிணி களைவாய் இங்கே (சம
இரண்டு களை சவுக்கம்
அருள்மேவு ஆதி சங்கரர் அணிய செய்த
பொருள் பொதியம் ஸ்ரீ சக்ர குழை அணிபவளே
மத்யம கால சமஷ்டி சரணம்:
கருமாரி உருவாகி காத்திடும் தாயே
உருகியுனை பணிவோரை உய்விக்கும் மஹாமாயே (சமய
Subscribe to:
Posts (Atom)