தாயுமானவர்
பல்லவி
மலைக்கொட்டைதனில் மகிழ்வாக அமர்ந்திட்ட மாணிக்க விநாயகனே
நிலையான வளமுடை காவிரியபாயும் திருசிராபள்ளியிலே திகழ்பவனே
அனு பல்லவி
மலைப்புதரும் மலையதனின் உச்சிவந்து உன்னடி தொழுவோரை
மனக்கவலை வேரறுத்து மாட்சிமை செய்யும் நின்மலரடி தொழுதோமே
சரணம்
மகப்பேறு காலமதில் மாதொருத்தி மனமுருகி அழைத்தவுடன்
இகபரம் காக்கும் ஈசனவன் இசைந்தோடி தாயாக உருமாறி
சுகப்ரசவம் ஆகிடவே துணைபுரிந்த நின்தந்தை கோலமதை
நெகிழ்வுடன் தரிசிக்க நின்சன்நதி அடைந்தோமே அருள்வாயே
.........................
இத்தொடரில் பல்வேறு கோவிலாக பற்றி விளக்கமும் பாடல்களும் எழுதவிருக்கிறேன். சீர்மேவும் திருச்சிராபள்ளி திருநகரில் சிங்காரமாக கொலுவிருக்கும் மாணிக்க விநாயகரை தொழுது எனது கோவில் அனுபவங்களை உங்களடுன் பங்கிட்டு கொள்கிறேன்.(பிள்ளையார் சுழி)
இக்கோவில் ஒரு மலை கோவிலாகும்
மலையை குடைந்து உருவாகப்பட்டது. மலை உச்சியில் நின்று பார்த்தால்
திருச்சி மாவட்டம் முழுமையும் தெரியும். இதன் சரிதியாமும் புராண
பெருமைகளும் வருஉம் தொடர்களில் வெளிவரும் (வளரும்)
வாழ்க வளமுடன் -கலாவதி ரெங்கசாமி.
No comments:
Post a Comment