Sunday, April 5, 2009

பல்லவி

கண்ணபுரம் தன்னில் கவினுற அமர்ந்தவளே
சன்னதிக்கு வந்திடவே என்ன பேரு பெற்றோம்
அனு பல்லவி
முன்னம் செய்திட்ட வினைகளை களைபவளே
இன்னும் பிறவிகள எடுப்பினும் நீயே கதியம்மா
சரணம்
சமயபுரம் வந்தோம் சடுதியில் காத்திடுவாய்
உமையவளின் உருவே உன்னடி சரணமம்மா
சுமையனைத்தும் நின் பாதம் தனில் சமர்ப்பித்தோம்
எமையாளும் ஈஸ்வரியே எங்களை காத்திடுவாய்



No comments:

Post a Comment